தமிழ்நாடு
முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை குறைக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் பெய்யும் மழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமானது.

முல்லைப் பெரியாறு
தற்போது 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. கேரளாவில் வெள்ளத்தால், நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு வழக்கு தொடுக்கப்பட்டது. அவசர வழக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதை விசாரித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139 அடியாக குறைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.










