தமிழ்நாடு
தமிழ்நாடு கேட்டது ₹24,679.77 கோடி… கிடைத்தது வெறும் ₹4,136 கோடி தான்!

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில் நிவர், வர்தா, ஒக்ஹி, மிச்சாங் போன்ற புயல்கள் மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்திய அரசிடம் மொத்தம் ரூ. 24,679.77 கோடி நிவாரணம் கோரியுள்ளது. ஆனால், அதற்கு எதிராக மாநிலத்திற்கு கிடைத்தது ரூ. 4,136 கோடி — அதாவது கோரிக்கையின் 17% மட்டுமே.
2014–15 முதல் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) மூலம் தமிழகம் ரூ. 12,208 கோடி பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 9வது இடம்.
தேசிய பேரிடர் மறுமொழி நிதியில் (NDRF) இருந்து கூடுதல் நிதி விடுவிப்பது பல நிலைகளில் மத்திய அரசின் மதிப்பீடு மற்றும் ஒப்புதலின் பேரில் தான் நடைபெறும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


















