சினிமா செய்திகள்
ஸ்ரீதேவி பங்களா படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் போனி கபூர்
ஒரே ஒரு கண் சிமிட்டலில் இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த பிரியா வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்ரீதேவி பங்களா படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்த டிரைலரில் ஸ்ரீதேவி என்ற பெயர் கொண்ட இளம் நடிகையாக பிரியா வாரியர் நடித்துள்ளார். மேலும், படத்தில் மது அருந்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக பாத் டப்பில் ஸ்ரீதேவி இறந்து கிடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனால், கடுப்பான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி பங்களா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இப்படத்தை இயக்கிய பிரஷாந்த் மம்பள்ளி, ஸ்ரீதேவி என்பது பொதுப் பெயர் என்றும், தாங்கள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.











