சினிமா செய்திகள்
உன்னை தேடுகிறேன் அம்மா: ஸ்ரீதேவி மகள் ஜான்வி உருக்கம்!

பிரபல நடிகை மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இன்று. இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

#image_title
தமிழகத்தில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஹோட்டல் குளியலறையில் யாரும் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார்.
ஸ்ரீதேவியின் மரணத்துக்கு பின்னர் அவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்கத்தொடங்கினார். அவரும் தற்போது பிரபல நடிகைகள் வரிசையில் சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் மகள் ஜான்வி கபூர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அம்மா நான் இன்னமும் உன்னை எல்லா இடங்களிலும் தேடுகிறேன். உன்னை பெருமைப்படுத்தும் விதமாக நான் எல்லாவற்றையும் செய்வதாக நம்புகிறேன். நான் எங்கே சென்றாலும், என்ன செய்தாலும் அது உன்னில் தான் ஆரம்பித்து முடிகிறது” என பதிவிட்டுள்ளார்.


















