Connect with us

இந்தியா

நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? கணவர் போனி கபூர் ஆவேச பதில்!

Published

on

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கேரள டிஜிபி கூறிய கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது ஹோட்டல் அறையில் குளியலறையில் பிணமாக கிடந்தார். மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பான விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது திட்டமிட்ட கொலை என கேரள டிஜிபி ரிஷிராஜ் கூறியுள்ளார். மலையாள நாளிதழ் ஒன்றில் இதுகுறித்து அவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில், தடயவியல் துறை நிபுணர் டாக்டர் உமாதாதன் என்னுடைய நண்பர். அவர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் கூறியபோது, எதிர்பாராதவிதமாக ஸ்ரீதேவி நீரில் மூழ்கி மரணமடையவில்லை. அது திட்டமிட்ட கொலை என்றார்.

ஒரு அடி ஆழம் மட்டுமே உள்ளே குளியல் தொட்டியில் மூழ்கி யாரும் இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த அளவு உள்ள நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்து, தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார் தயவியல் நிபுணர் உமாதாதன். இந்த கட்டுரை திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இன்.காம் ஊடகத்துக்கு பேட்டியளித்தபோது. இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற மூடக் கதைகள் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதால் எதிர்வினையாற்ற வேண்டிய தேவையே இல்லை. அடிப்படையில், இவையெல்லாம் மற்றவர்களின் கற்பனைக்கதைகளே என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized28 minutes ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

Translate »
網絡設備 ip cam.