சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன் 5 முதல் புரமோ: அசத்தும் கமல்ஹாசன்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் அனேகமாக அக்டோபர் 3ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் லோகோ அறிமுகப்படுத்தும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த வீடியோ வைரல் ஆகியது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் கல்யாண வீட்டில் ஆரம்பத்தில் நடக்கும் வரவேற்புகள், அதன்பின் போகப்போக நடக்கும் குளறுபடிகள், சண்டை சச்சரவுகள் ஆகிய காட்சிகள் உள்ளன. இதேபோல் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், போகப்போக சண்டை சச்சரவு வரும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அனைத்து பொருத்தம் பார்த்து நடத்தும் கல்யாணம் வீட்டிலேயே இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது பிக் பாஸ் வீட்டில் கேட்கவா வேண்டும் என்று அவர் கூறிய வசனம் இந்த ப்ரோமோ வீடியோவின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரோமோ விடியோ வெளியாகிவிட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார்? எப்போது தொடங்கும் போன்ற அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. ???? #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/c6z5vIflF5
— Vijay Television (@vijaytelevision) September 3, 2021
















