சினிமா செய்திகள்
விஜய், அஜித் படங்களில் கெளரவ வேடம்: கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்து விட்டு அதன்பிறகு கௌரவ வேடத்தில் மட்டும் நடிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் வயது முதுமை காரணமாக தற்போது சோர்வாக இருக்கிறார் என்றும் அவரால் முன்பு போல் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு படங்கள் மட்டும் கதாநாயகனாக நடித்து விட்டு அதன்பிறகு முழுநேரமாக தயாரிப்பில் ஈடுபட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
இளம் நடிகர்கள் மற்றும் இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் பல திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவ்வப்போது அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களில் கௌரவ வேடங்களில் நடிக்க மட்டும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஹிந்தியில் அமிதாப்பச்சன் பாணியை கடைபிடிக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.