Connect with us

இந்தியா

மருமகளுக்கு பிளாட் பரிசளித்த மாமனார்.. அடியாட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்..!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தான் நேரில் பார்த்ததாக அவருடைய மகன் மணிகண்டன் காவல்துறையில் தகவல் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த விசாரணையின் போது நாராயணசாமி வாக்கிங் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து கொலையை நேரில் கண்ட நாராயணசாமி மகன் மணிகண்டன் உள்பட பலரிடம் விசாரணை செய்தபோது மணிகண்டனின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

இதனை அடுத்து மணிகண்டனிடம் காவல்துறி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்த போது தந்தையை தானே கொலை செய்ததாகவும் இதற்காக ஒரு கோடி ரூபாய் அடியாள்களிடம் கொடுத்து கொலை செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 32 வயதான மணிகண்டன் வேலையில்லாமல் இருந்தார் என்றும் தந்தை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரை கொலை செய்தால் அவருடைய சொத்து முழுவதும் தனக்கு வரும் என்றும் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. மறைந்த நாராயணசாமிக்கு பெங்களூரில் சொந்தமாக 28 பிளாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிகண்டன் ஒரு பெண்ணை திருமணம் செய்து நிலையில் தனது மனைவியை அவர் கொலை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அந்த வழக்கிலிருந்து விடுபட்டு 2020 ஆம் ஆண்டு அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அர்ச்சனா ஒரு கைக்குழந்தையுடன் இருக்கும் நிலையில் அவரையும் வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதனால் கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்ட அர்ச்சனாவுக்கு உதவி செய்தற்காக மணிகண்டனின் தந்தை நாராயணசாமி ஒரு பிளாட் ஒன்றை பரிசளித்து உள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஒரு கோடி மற்றும் ஒரு பிளாட் என அடியாட்களிடம் பேரம் பேசி தனது தந்தையை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது நடவடிக்கை சரி இல்லை என்பதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்த போது மணிகண்டன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலை செய்ய அவரால் பணி அமர்த்தப்பட்ட இரண்டு அடியாட்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகளுக்கு பிளாட் ஒன்றை பரிசளித்த முதியவரை அவரது மகனே அடியாட்களை ஏவி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized20 minutes ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
saint vincent resort & casino. Following klangspot playlists is a simple way to discover carefully selected music for different genres, moods and moments. content clusters only work when the topic has.