Connect with us

சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 13 என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் ’நாளை’ என்று ஒரே ஒரு வார்த்தை உடன் கூடிய டுவிட்டை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டிரெய்லரை மிகப்பெரிய அளவில் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.