உலகம்
இந்திய விமானங்களுக்கு தடை: ஆஸ்திரேலியா அதிரடி உத்தரவு!

இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கிட்டத்தட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகள் இந்திய விமானங்களுக்கு சமீபத்தில் தடை விதித்துள்ளன என்பதும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களை எச்சரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய வரும் விமானங்களுக்கும் தடை விதிப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய விமானங்கள் வர மே 15ஆம் தேதி வரை தடை என ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது
மே 15ஆம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் நிலவரத்தைப் பொறுத்தே இந்த தடையை நீடிப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய முடியும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கும் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






