Connect with us

ஆரோக்கியம்

ஆந்திரா ஸ்டைலில் காரமாய் பச்சை மிளகாய் சிக்கன் செய்வது எப்படி? வீட்டிலேயே சுவையாக சமைக்கும் ரெசிப்பி!

Published

on

பச்சை மிளகாயின் காரத்தில் ஆனந்தம் கொடுக்கும் ஆந்திரா சில்லி சிக்கன்!
சைவ உணவுகள் எத்தனை வகையிலிருந்தாலும், சிலருக்கு அசைவ உணவுகளின் மீதான ஆசை குறையவே மாட்டாது. அதிலும் காரமாய் இருக்கும் சிக்கன் வகைகள் என்றால் சொல்வதற்கு வார்த்தைகள் தேவைப்படும்.

அந்த வகையில், பச்சை மிளகாயை முக்கிய அம்சமாகக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் தயாரிப்பது என்பது உணவுக்காரர்களுக்கான ஒரு ஸ்பெஷல் டிஷ். இங்கு வீட்டிலேயே இந்த ஸ்பைசி சிக்கன் ரெசிப்பியை எளிமையாக செய்வது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மேரினேஷனுக்காக:

  • சிக்கன் (எலும்புடன்) – 600 கிராம்

  • மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்

  • உப்பு – 1 டீஸ்பூன்

  • எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி

பச்சை மசாலா விழுதுக்கு:

  • பச்சை மிளகாய் – 10-12

  • புதினா – 2 கைப்பிடி

  • கொத்தமல்லி இலை – 2 கைப்பிடி

  • இஞ்சி – 1 இஞ்ச் துண்டு

  • பூண்டு – 6 பல்

  • சீரகம் – 1 டீஸ்பூன்

  • மிளகு – 1 டீஸ்பூன்

  • ஏலக்காய் – 2

வதக்க:

  • எண்ணெய் – தேவையான அளவு

  • பிரியாணி இலை – 1

  • வெங்காயம் – 1 (நறுக்கியது)

  • கருவேப்பிலை – சிறிதளவு

  • கரம் மசாலா – ½ டீஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு


👩‍🍳செய்முறை:

  1. சிக்கனை உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கழுவி, எலுமிச்சை சாற்றுடன் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. பச்சை மசாலா விழுதுக்கு அனைத்து பொருட்களையும் சிறிது தண்ணீருடன் விழுதாக அரைக்கவும்.

  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, கருவேப்பிலை தாளிக்கவும்.

  4. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மசாலா விழுதை சேர்க்கவும்.

  5. எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் கிளறவும்.

  6. பின்னர் சிக்கனை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி, தேவையான தண்ணீர் ஊற்றி சிக்கன் வெந்து மசாலா ஊறும் வரை வேகவிடவும்.

  7. கடைசியில் கரம் மசாலா தூவி, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சூப்பரான பச்சை மிளகாய் சில்லி சிக்கன் தயார்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
dr68 seo power :.