உலகம்
கிரிப்டோ சந்தையில் இறங்குகிறதா அமேசான்? வாடிக்கையாளர்கள் குஷி..!

உலகின் முன்னணியே இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் இந்தியாவில் உள்பட உலகம் முழுவதும் அனைத்து பொருள்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சேவை செய்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கிரிப்டோ சந்தையில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிரிப்டோ கரன்சி வர்த்தகம் என்பது கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டு கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு தலைகீழாக குறைந்ததால் இதில் முதலீடு செய்தவர்களின் மதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து நஷ்டம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே.
ஆனாலும் கிரிப்டோகரன்சி சந்தை ரத்த களறியாக உள்ள நிலையிலும் இன்னும் சிலர் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்வதில் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகளாவிய இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் கிரிப்டோ சந்தையில் நுழைய இருப்பது இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு நம்பிக்கையை காட்டுவதாக தெரிகிறது.
அமேசான் அடுத்த மாதம் அதன் சொந்த என்டிஎஃப் சந்தையுடன் கிரிப்டோ சந்தையில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அடுத்த மாதம் என்டிஎஃப் என்ற சந்தையை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அமேசான் டிஜிட்டல் மார்க்கெட் பிளேஸ் என்ற புதிய அம்சத்தை அமேசான் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் இந்த தளத்தில் தான் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக அமேசான் தனது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த கிரிப்டோ சேவையை செய்ய இருப்பதாகவும் அதன் பின் படிப்படியாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவுபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்டிஎஃப் இணையதளத்தில் அமேசான் டிஜிட்டல் மார்க்கெட் பிளேஸ் என்ற அம்சத்தை கிளிக் செய்வதன் மூலம் கிரிப்டோ கரன்சியை வர்த்தகம் செய்வது எப்படி என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம் என்றும் அமேசான் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே கிரிப்டோவை வர்த்தகம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் என்டிஎஃப் சேவைகளை தொடங்க திட்டமிட்டது என்றும் ஆனால் திடீரென கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைத்ததால் அந்த திட்டத்தை அமேசான் ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இளைஞர்களால் மிகப்பெரிய அளவில் கிரிப்டோ சந்தை வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அமேசான் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல என்று தொடர்ந்து பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.