இந்தியா
அதானி-ஹிண்டன்பர்க் விளைவு? இந்தியாவின் 20 பெரிய வணிகங்களை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஏராளமானோர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர் என்பதும் தெரிந்ததே. ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது சுயநலத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி அறிக்கையை வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை பார்த்தது என்றாலும் அதானி நிறுவனத்திலும் சில பிரச்சனைகள் இருந்தது என்பது அந்த அறிக்கையின் மூலம் பலருக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி இது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தது என்பது தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக குழு அமைக்கப்பட்டு அதானி ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#image_title
இந்த நிலையில் அதானி ஹிண்டன்பர்க் நிகழ்வு போன்று மீண்டும் ஒரு நிகழ்வு நடக்காமல் இருப்பதற்காக நிதி அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி அதானி நிறுவனம் போன்ற இருக்கும் 20 பெரிய நிறுவனங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்த நிறுவனங்களின் மிகப்பெரிய கடன்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நிதி நிலையை சரியாக கையாளவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகலாம் என்ற நிலையில் இருக்கும் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு கடன்கள் எந்த அளவுக்கு பொருளாதாரத்திற்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஆபத்தும் கூட என்பதும் இது இருமுனை கத்தி போன்றது என்றும் கூறப்படுவது உண்டு.
கடன் வாங்கிய நிறுவனங்கள் அந்த கடன் தொகையை சரியாக பயன்படுத்தி தொழிலை வளர்த்து, வளர்ச்சி அடைந்தால் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் கடன் வாங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் நிதிநிலையை சரியாக கையாளாகாமல் தோல்வி அடைந்து வருவதால் தான் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்படுகிறது.

#image_title
இதனை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தற்போது தனது கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள 20 பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் கடன் வாங்கி உள்ள நிலையில் அந்த நிறுவனங்களில் நிறுவனங்களின் கடன்கள், லாபம், வருவாய், கடனை திருப்பி செலுத்தும் முறை, பத்திரங்கள் மூலமாக பெற்ற கடன்கள், பங்கு அடமான கடன்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருவதாகவும் நாட்டின் நிதி நிலையை பாதுகாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தேவைப்படும்போது இந்த 20 நிறுவனங்களின் மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் நிறுவனங்களுக்கு சில அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.