உலகம்
ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு… சி.இ.ஓவுக்கு ஒரு மில்லியன் சம்பள உயர்வு..வங்கியின் பாரபட்சம்..!

ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து விட்டு அதற்கு பதிலாக CEOக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளத்தை உயர்த்தி உள்ள வங்கியின் நடவடிக்கையால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக வேலை நீக்க நடவடிக்கை, சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வங்கியான யுபிஎஸ் குழுமம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக கடும் அதிருப்தியை பெற்று வருகிறது.
இந்த வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊழியர்களின் போனசை 10% குறைத்தது. இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வங்கியின் சி.இ.ஓ ரால்ப் ஹேமர் என்பவருக்கு சம்பள உயர்வை அளித்துள்ளது. இதற்கு முன்னர் அவர் 11 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு 12 மில்லியன் டாலர் சம்பள உயர்வு என அறிவித்துள்ளது. முந்தைய ஊதியத்திலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சம்பள உயர்வு சிஇஓவுக்கு இந்த வங்கி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கஷ்டப்பட்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கு 10% போனஸை குறைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஊழியர்களுக்கு போனஸ் ஆக 3.3 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில் இந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் குறைத்து போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வங்கியான யுபிஎஸ் வங்கி கடந்த சில மாதங்களாகவே சீரற்ற முறையில் இயங்கி வருவதாகவும் நிதி திரட்டுதல், மூலதனம் திரட்டுதல் ஆகியவற்றில் சுமார் 50% சரிவை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வர்த்தகத்தில் ஆதாயம் மற்றும் நிர்வாகத்தில் உள்ள வரவு செலவு ஆகியவற்றை ஈடு கட்டுவதற்காக இந்த வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அதில் ஒன்றுதான் போனஸ் குறைப்பு நடவடிக்கை என சமீபத்தில் அதன் சிஇஓ ஹோமர் அறிவித்திருந்தார்.
ஆனால் அதே நேரத்தில் செயல் திறனுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் ஆரோக்கியமான கலாச்சாரத்தையும் யூபிஎஸ் வங்கி கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதே ஸ்விட்சர்லாந்து நாட்டின் இன்னொரு வங்கியான கிரெடிட் சூசி என்ற வங்கி ஆயிரக்கணக்கான பணி நீக்க நடவடிக்கையை எடுத்த நிலையில் யூபிஎஸ் வங்கி எந்தவித பணிநீக்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போனஸ் குறைப்பு நடவடிக்கை மட்டுமே எடுத்துள்ளது என்றும் இந்த வங்கியின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.