Connect with us

சினிமா செய்திகள்

64 நாடுகளை பைக்கில் சுற்றிய இளம்பெண்ணை சந்தித்த அஜித்: வைரல் புகைப்படம்!

Published

on

உலகை பைக்கில் சுற்றிய இளம்பெண்ணை அஜித் டெல்லியில் சற்றுமுன் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவலும் இது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் பைக்கில் அவர் நீண்ட தூரம் பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர் என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே அவர் அசாம் வரை சுமார் 2000 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ரஷ்யாவுக்கு வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக சென்ற அஜித், உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுவதற்கான திட்டத்தை இயற்றி உள்ளார் என்பதும் இது குறித்து ரஷ்யாவில் உள்ள சிலரிடம் அவர் கலந்து ஆலோசித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் உலகில் சுற்றிய இளம் பெண் Maral Yazarloo என்பவரை அஜித் சற்று முன் டெல்லியில் சந்தித்து உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஏழு கண்டங்களில் உள்ள 64 நாடுகளில் பைக்கில் தன்னந்தனியாக இளம்பெண் Maral Yazarloo என்பவர் சுற்றிவந்து உள்ள நிலையில் அவரது அனுபவத்தை கேட்ட அஜித், தானும், உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு பரிந்துரைகள் வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இது குறித்த தகவலை புகைப்படத்துடன் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த டுவிட் மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அஜித் உலகம் சுற்றும் வாலிபனாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Bio pages sell.