சினிமா செய்திகள்
சர்வைவருக்கு போட்டியாக களமிறங்கியது பிக்பாஸ்: தொடங்கும் தேதி அறிவிப்பு!

ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கும் தேதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்கள் மிகவும் பிரமாதமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐந்தாவது சீசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதம் ஆகியுள்ள நிலையில் தற்போது அக்டோபர் 3ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி, சுனிதா மற்றும் ஷகிலாவின் மகள் மிளா, பிரியங்கா, பிரியா ராமன், ஜிபி முத்து உள்பட ஒரு சிலர் இந்த போட்டியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் தனியார் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் அக்டோபர் 3ஆம் தேதி நிகழ்ச்சி தொடங்கும் போதுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.