உலகம்
அடோப் நிறுவனத்திலும் பணிநீக்க நடவடிக்கையா? என்ன சொல்கிறது நிர்வாகம்?

கூகுள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அடோப் நிறுவனத்திலும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள் சமூக வலைதளங்களில் கசிந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களில் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் இதனால் ஏராளமானோர் வேலை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இது குறித்து அடோப் தலைமை மக்கள் அதிகாரி குளோரியா சென் அவர்கள் சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி என்று கூறிய போது ‘எங்கள் நிறுவனத்தை பொருத்தவரை பணிநீக்கம் செய்யப்படாமல் இருக்க நாங்கள் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். பணிநீக்கம் இல்லாமலே நாங்கள் எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 3000 பணியாளர்கள் அடோப் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 100 ஊழியர்களை மட்டும் பணி நீக்கம் செய்தது என்பதும் அதன் பிறகு எந்த விதமான பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஊழியர்களை ஒரு சில பதவிகளுக்கு மாற்றம் செய்யும்ன் நடவடிக்கை வேண்டுமானால் அடோப் நிறுவனம் எடுக்கும் என்றும் இனி மேல் பணி நீக்க நடவடிக்கை அடோப் நிறுவனத்தை பொருத்தவரை இருக்காது என்றும் நாங்கள் சில ஊழியர்களை முக்கிய பதவிகளுக்கு பணி அமர்த்த திட்டமிட்டு உள்ளோம் என்றும் குளோரியா சென் தெரிவித்துள்ளார்.
எனவே சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அடோப் நிறுவனத்தை பொருத்தவரை இப்போதைக்கு பணி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் எனவே அடோப் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி பணி புரியலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அடோப் அதன் முதல் காலாண்டு வருவாய் முடிவுகளை மார்ச் 15 அன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் $4.53 பில்லியன் வருவாயை எட்டியுள்ளது என்பதும், இது ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2022 நிதியாண்டில் அடோப் $17.61 பில்லியன் வருவாயை எட்டியது, இது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 12 சதவீதமாகும். 2022 நிதியாண்டில் அடோப் சாதனை வருவாய் மற்றும் செயல்பாட்டு வருவாயை ஈட்டியுள்ளது என்று அடோப் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் கூறினார். “எங்கள் சந்தை வாய்ப்பு, இணையற்ற புதுமை, செயல்பாட்டுக் கடுமை மற்றும் விதிவிலக்கான திறமை ஆகியவை எங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எங்களை நன்றாக நிலைநிறுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.