சினிமா செய்திகள்
‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

கீர்த்தி சுரேஷிடம் இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்க மாட்டோம் என அவரது அம்மா மேனகா சுரேஷ் கூறியுள்ளார்.
நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தசரா’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு கீர்த்தி சுரேஷின் பெற்றோர் சுரேஷ் மற்றும் மேனகா சுரேஷ் இருவரும் பேட்டி அளித்துள்ளனர். அதில் கீர்த்தியை பற்றி சமீப காலங்களில் வரும் காதல் கிசு கிசுக்கள் பற்றியும் அவரைப் பற்றிய உடல் கேலிகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

Keerthy Suresh
அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருப்பதாவது, “சினிமாத்துறைக்கு வந்துவிட்டாலே இதுபோன்ற பல விஷயங்கள் வர தான் செய்யும். இதையெல்லாம் தெரிந்துதான் இந்த துறைக்கே வருகிறோம். அதுபோல, கீர்த்தியிடம் இதுநாள் வரைக்கும் அவர் குறித்தான காதல் வதந்திகள் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவே கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை! அப்படி ஏதாவது இருந்தால் கீர்த்தியே எங்களிடம் வந்து சொல்வாள். அதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.
உண்மை எனில் நாங்களும் வெளிப்படையாக எல்லாரும் முன்னிலையிலும் சொல்லப்போகிறோம். இதில் மறைக்க ஒன்றுமே இல்லை. அவள் பத்தின கேலிகளும் கிசுகிசுக்களும் வருகிறது என்றால் அவள் வளர்ந்து வருகிறாள் என்று தான் அர்த்தம். அதனால் அதையும் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதை எப்படி சமாளித்து வெளியே வரவேண்டும் என்ற பக்குவமும் கீர்த்திக்கு உண்டு. அவள் சினிமா பயணத்தில் சிறந்த ஒரு படமாக ‘மகாநடி’யைக் குறிப்பிடுவோம்.

Keerthy Suresh
அந்த படத்துக்கான வாய்ப்பு வந்த பொழுது இதை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கம் அவளுக்கு இருந்தது. நமது நடிப்பு திறன் பார்த்து தான் இந்த வாய்ப்பு வந்தது. அப்படி இருக்கும்பொழுது அவள் ஒத்துக் கொண்டு இந்த படம் நன்றாக போகவில்லை என்றாலும் அதிலிருந்து வெளியே வர தெரிய வேண்டும்.
அதேபோல அவள் ஒத்துக்கொண்டு படம் நன்றாக போனாலும் அந்த வெற்றி களிப்பில் இருந்து வெளியே வரவும் தெரிய வேண்டும் என்ற விஷயங்களை வலியுறுத்தி தான் அதை ஒத்துக் கொள்ள செய்தோம்” என பேசி உள்ளனர்.