Connect with us

ஆரோக்கியம்

ஆட்டுக்கால் சூப்: கை, கால், மூட்டு வலிக்கு தீர்வு! வாரம் 2 முறை குடித்து நன்மைகளை அனுபவிக்கவும்!

Published

on

ஆட்டுக்கால் சூப்: குளிர்காலத்தில் உடலை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் உணவுகளில் முக்கியமானது ‘ஆட்டுக்கால் சூப்’. இந்த சூப் சளி, இருமல், மூட்டு வலி, மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வாரத்தில் இரண்டு முறை இந்த சூப்பை உட்கொண்டு ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கலாம்.

ஆட்டுக்கால் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

  • ஆட்டுக்கால் – 250 கிராம்
  • வெங்காயம் – 1/2 கப்
  • தக்காளி – 1
  • மிளகு – 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன்
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • இஞ்சி – 2 துண்டு
  • பூண்டு – 3
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  1. மல்லி விதை, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடியாக அரைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
  3. ஆட்டுக்காலை சுட்டு, குக்கரில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 15 விசில் வேக வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  5. தாளித்த கலவையில் குக்கரில் வேகவைத்த சூப் மற்றும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
  6. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி சூப்பை பரிமாறவும்.

ஆட்டுக்கால் சூப்பின் ஆரோக்கிய நன்மைகள்:

  1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
    ஆட்டுக்கால் சூப்பில் உள்ள ‘அர்ஜினைன்’ பொருள் உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்க்க உதவும்.
  2. எலும்புகளை வலுப்படுத்தும்:
    மக்னீசியம், கால்சியம், மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
  3. தூக்கமின்மை நீங்கும்:
    வாரத்தில் இரண்டு முறை ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நரம்புகள் தளர்வடையும் மற்றும் நல்ல தூக்கம் கிடைக்கும்.
  4. உடல் சுத்தமாகும்:
    உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதுடன், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
  5. எடையை குறைக்க உதவும்:
    குறைந்த கலோரியுடன் எளிதில் செரிமானமாகும் இந்த சூப் உடல் எடையை குறைக்க உதவும்.
  6. செரிமான மண்டல ஆரோக்கியம்:
    செரிமான மண்டலத்தை சீராக வைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..