ஆரோக்கியம்
நாள்பட்ட சர்க்கரை வியாதியா?… பாதங்களில் கொப்புளமா?… அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்ற வேண்டுமா?… அவசியமா?…
நாள்பட்ட சர்க்கரை வியாதியால் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு கால் விரல்களையோ சில சமயங்களில் கால்களையோ அகற்றுவது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. கால்களில் ஏற்படும் சிறிய கொப்புளங்களை குணப்படுத்த முடியாது என்று கூறும் டாக்டர்கள் விரல்களையும் கால்களையும் வெட்டி விட்டு குணப்படுத்த முடியும் என்று கூறுவது வேடிக்கையாக இல்லையா?…
80களின் தொடக்கத்திலிருந்து நாம் காணும் ஊடக விளம்பரங்களின் வழியாக நமது வாழ்க்கை முறை, உணவு முறை, பழக்க வழக்கங்கள், சிகிச்சை முறைகளின் மீது மிகப்பெரிய தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு சர்க்ரை வியாதி என்ற உயிர்க்கொல்லி வியாதி பரவி மக்களின் மனதில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
80களின் தொடக்கத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200 மி.கி. முதல் 240 மி.கி. வலை அருந்தால் சா்க்கரை வியாதி என்று கூறியவா்கள் இப்போதெல்லாம் 70மி.கி. முதல் 100 மி.கி. இருந்தாலே சர்க்கரை வியாதி வந்து விட்டது என்கின்றனர். இந்த அளவீடுகள் மாற்றியமைக்கப்பட்டு பெரும்பான்மை மக்களை இந்த “சைலண்ட் கில்லர்“ வியாதி வட்டத்திற்குள் கொண்டு வந்து அதற்கான மருந்து மாத்திரை வியாபார லாபி வெகு சிறப்பாக நடந்து வருகிறது.
கோவிட் தொற்றுக் காலத்தில் நமது மனங்களில் ஏற்றப்பட்ட மரண பயம் நீடித்து தொடர்கதையாகி கார்ப்பரேட் நிறுவனங்களின் “மாஸடர் செக்கப்“ நமது புத்தியில் பதிந்து அதனைச் செய்யப்போகும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வியாதியஸ்தர்கள் என முத்திரை குத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது.
சர்க்கரை நோய்க்கு தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளால் இந்நோயாளிகளின் கை விரல் கால்விரல் நுனிகளில் செல்லுலோஸ் என்ற மாவு கூழ்ம கொருள் அதிக அளவில் சேர்ந்து கை கால்கள் மரத்துப் போய் அவற்றில் எற்படும் காயங்களால் கொப்புளங்களால் சீழ் பிடித்து விரல்களையோ கால்களையோ அறுவை சிகிச்சை முலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. சுயமாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நோயாளிகள் கூட இதிலிருந்து விடுபட முடியாத கொடுமை நிலவி வருகிறது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 77 மில்லியன் மக்கள் “டைப்-1“ சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 25 மில்லியன் மக்கள் புதிய சர்க்கரை நோயாளிகளாக உருவாகி வருவதாகவும் நாள்தோறும் மருத்துவனைகளுக்கு வரக்கூடிய சர்க்கரை நோயாளிகளில் 23.7 சதவீதம் பேர்
அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகவும் இந்திய மருத்துவ கழகத்தின் 2022 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய தேசீய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு 2023ல் வெளியிட்ட அறிக்கையின்படி ஆண்டு தோறும் 1,00,000 பேரின் கால்கள் அறுவை சிகிச்சை முலம் அகற்றப்பட்டு வருவதாகவும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அறிய வருகிறது. நாள்தோறும் சிகிச்சை பெற்று வரும் 100 சர்க்கரை நோயாளிகளில் 10 பேர் கொப்புளங்கள் ஏற்பட்ட கால்களுடன் சிகிச்சைக்கு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் மருத்துவமனைகளின் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் 15 முதல் 25 சதவீதம் பேர் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை பெறுவதாகவும் கூறுகின்றனர். 2023 இறுதியில் பெங்களுரு மாநகர மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை பெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
80களின் தொடக்கத்திலிருந்தே நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை குறை கூறி வந்த மருத்துவர்கள் இப்போதெல்லாம் மீண்டும் நம்மை அந்த பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலை எப்போது மாறும்… இதனைத் தடுக்க நாம் என்ன வெய்ய வேண்டும்.. எது சரி, எது தவறு என்று தீர்மானிக்கும் பொறுப்பினை ஆகச் சிறந்த உங்கள் அறிவைக் கொண்டு நீங்களே தீா்மானியுங்கள். தவறினால் சில ஆண்டுகளில் நாம் அணைவரும் கைகளையோ கால்களையோ இழந்து ஊனமாக நிற்போம் என்பதை மறந்து விடாதீர்கள். இதனை ஒரு வகையில் நம் மீது திணிக்கப்பட்ட “பயோ வார்“ என்றே கூறலாம். இனி வருங்காலம் உங்கள் கையில்..















