சினிமா
ஆடை இல்லாமல் இருப்பது தான் உண்மையான பிறந்தநாள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அமலா பால்!
Published
4 years agoon
By
caston
நடிகை அமலா பால் தொடர்ந்து சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து லீடு ரோலில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான ஆடை படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதன் டிரைலரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் கிழிந்த ஆடையுடன் உடலின் பல பாகங்கள் தெரியும்படி தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் வைரல் ஆனது மட்டுமின்றி இந்த போஸ்டருக்கு எதிராக சர்ச்சைகளும் கிளம்பின.
தொடர்ந்து வெளியான டீசரில் அமலா பால் ஆடை இல்லாமல் இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இன்று வெளியான ஆடை படத்தின் டிரைலரில் அமலா பால், புகைபிடித்துக் கொண்டு பிறக்கும் போது டிரெஸோடவா பிறந்தோம்.. ஆடை இல்லாமல் இருப்பது தான் உணமையான பர்த் டே ட்ரெஸ் என கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
You may like
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
ஜோதிமணி எம்பியின் ஆடை கிழிக்கப்பட்டதா? அதிர்ச்சி வீடியோ
-
அருண்விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான டிரைலர்
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்