தமிழ்நாடு
எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

#image_title
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன் என்று கூறினார். அப்போது அங்கிருந்த கிராம மக்கள் எதையும் செய்து தரவில்லை, குடிநீர் வருவதில்லை என்று கூச்சலிட அந்த இடமே பரபரப்பாகியது.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க, கேட்க வந்துட்டீங்க, உட்காருங்க. நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் என கோபமாக பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இதற்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய போது, இப்போ பஸ்சில் எப்படி போறீங்க..இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாம் ஓசி பஸ்சில் போறீங்க’ என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
அதேப்போல மேடையில் இருந்த ஒரு ஒன்றியக் குழு தலைவரை அறிமுகப்படுத்தி பேசும் போது நீங்கள் எஸ். சி தானே ? என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் குறிப்பிட்ட கிராமத்தினரை எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க என கூறி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.