Connect with us

சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு குத்துப்பாட்டு: நடன இயக்குனர் யார் தெரியுமா?

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம்பெற்று உள்ளதாகவும் அந்த குத்து பாட்டை பிரபல நடன இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது என்பதும், இதனை அடுத்து காரைக்குடியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு குத்துப் பாட்டை கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிய சாண்டி மாஸ்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பல வருடங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் படத்தில் குத்துப்பாட்டு இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என்ற படத்தில்தான் அவர் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடிய நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Free carrd alternative | biolinker.