சினிமா செய்திகள்
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 2’ படம் எப்படி? டுவிட்டர் விமர்சனங்கள்!

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம் 2’திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று ‘த்ரிஷ்யம் 2’ படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த படத்தை பார்த்துவிட்டு டுவிட்டரில் ஒரு சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட பாசிட்டிவ் விமர்சனங்களாக வெளி வந்திருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.
முதல் பாகம் போலவே இயக்குனர் ஜீத்து ஜோசப் மிகவும் ஸ்மார்ட்டாக திரைக்கதை எழுதியுள்ளார் என்றும் இரண்டாம் பாகத்தை மிக சிறப்பாக வடிவமைத்து உள்ளார் என்றும் கூறியுள்ளனர். மோகன்லால் மற்றும் முரளி கோபி ஆகியோரின் நடிப்பு மிகவும் அபாரம் என்றும் படத்தில் துணை நடிகர்கள் அதிக அளவில் இருந்தாலும் அவர்கள் அனைவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்டர்வெல் டுவிஸ்ட் மற்றும் கடைசி 45 நிமிடங்கள் சான்ஸே இல்லை என்றும் இயக்குனர் மற்றும் மோகன்லால் இருவரும் சேர்ந்து படத்தை சிறப்பாக கொண்டு சென்றுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும், தயவு செய்து யாரும் இந்த படத்தை மிஸ் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்
‘த்ரிஷ்யம் 2’ படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




















