சினிமா
மீனாவுக்கும் தனுஷுக்கும் திருமணமா? வதந்தின்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா பயில்வான்?

சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சியை கொண்டாடி ஒட்டுமொத்த பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ள மீனாவுக்கு திருஷ்டி பட்டது போல இப்படியொரு வதந்தி வைரலாக பரவி வருகிறது.
பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனே அதை பற்றி பேசியிருப்பது தான் பல்வேறு தரப்பினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
நடிகர் தனுஷுக்கும் மீனாவுக்கும் திருமணம் நடைபெற போவதாகத்தான் தற்போது வெளியாகி உள்ள வதந்தி குறித்து பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
ஏற்கனவே முன்னணி நடிகைகள் எல்லாம் பாடி டிமாண்டிங்கில் பலான வேலைகளை பார்த்து வருவதாகவும், யார் யாருடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டார் என்றும் கூடவே சென்று பார்த்தது போல புட்டு புட்டு வைத்து சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன் தற்போது இப்படி நடிகை மீனாவுக்கு தனுஷுக்கும் புது ரூட்டை போட்டுக் கொடுத்து பஞ்சாயத்தை பெரிதாக்கி உள்ளார்.

#image_title
தமிழ் சினிமாவில் குழந்தை பருவம் முதல் நடித்து வரும் மீனா ஹீரோயினாக இப்போதும் மோகன்லால் உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தனது கணவர் வித்யாசாகரை பறிகொடுத்து விட்டு தவித்து வரும் மீனாவை தேற்றும் வகையிலேயே சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

#image_title
மீனாவின் முகத்துக்காகவே ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மீனாவின் நல்ல குணத்தையும் மனசையும் பாராட்டி வந்த நிலையில், தற்போது அதில் இருந்து டாப்பிக் எடுத்து தனக்கான வியூஸை அதிகரிக்க வேண்டும் என ரொம்பவே கீழ்த்தரமாக பயில்வான் ரங்கநாதன் இறங்கி விட்டதாக மீனா மற்றும் தனுஷ் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை கண்டபடி திட்டி வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து இருக்கும் நடிகர் தனுஷ் இரண்டாவதாக மீனாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மறுபக்கம் அனிருத் ஆபிஸிலேயே தங்கி இருப்பதாகவும் லால் சலாம் படத்துக்கு அனிருத் இசையமைக்காத நிலையில், அவரது ஆபிஸில் இந்தம்மாவுக்கு என்ன வேலை என்றும் கேட்டு இன்னொரு பிரச்சனையையும் கிளப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.