சினிமா
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் “டான்” – அறிவிப்பு வெளியீடு…

நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க உள்ள 16வது படத்திற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சுபாஸ்கரனுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்ஷனும் தயாரிக்க உள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இசை வழக்கம் போல அனிருத். சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியில் எப்போதும் வெற்றி படம் தான் என்பதால் இந்த படமும் வெற்றி பெரும் என நம்பலாம்.

கல்லூரி வளாகம், அங்கிருக்கும் அமைப்புகள், நூலகம், புட் பால் கிரவுண்டு ஆகியவற்றுடன் Bachlor of Engineering is Back என்ற வாசகத்துடன் முழுவதும் கல்லூரியை மையமிட்டதாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ அமைந்துள்ளது. அயலான், டாக்டர் படங்களை தொடர்ந்து விரைவில் டான் படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உற்சாகமான இசையில் வெளியாகி இருக்கும் டான் பட அறிவிப்பு ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என ஜனவரி 26ஆம் தேதி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயன் அறிவித்து இருந்தார்.









