சினிமா
மல்லுக்கு வந்த ரஜினி.. முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்.. மாவீரன் புதிய ரிலீஸ் தேதி இதோ!

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், திடீரென நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயனின் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என பேச்சுக்கள் அடிபட்டன.

#image_title
இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ரொம்பவே வருத்தமடைந்த நிலையில், அவர்களை சந்தோஷப்படுத்தும் அளவுக்கு மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை 15ம் தேதியே வெளியிடப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
சீக்கிரமே சிவகார்த்திகேயனின் தரமான சம்பவத்தை திரையில் காணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் ரசிகர்கள் #Maaveeran ஹாஷ்டேக்கை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

#image_title
ஆனால், புதிய போஸ்டர் விடாமல் அதே பழைய போஸ்டரில் அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை சற்றே அதிருப்தியடைய செய்துள்ளது. விரைவில் மாவீரன் படத்தின் டீசர் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாக காத்திருக்கின்றன.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். வில்லனாக மிஷ்கின், காமெடியனாக யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷ்ன மற்றும் ப்ரமோஷன்கள் நடத்த ஆகஸ்ட் மாதம் வரை எடுத்துக் கொள்ள நினைத்த படக்குழுவினர் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே தங்கள் பணிகளை முடித்து விட்டு ரிலீஸ் பண்ண முடிவு செய்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு எந்தவொரு பெரிய நடிகர்களின் படங்களும் வரவில்லையே என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஜூலை 15ம் தேதியே சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸாக போகிறது.
மாவீரன் படத்தைத் தொடர்ந்து ஜெயிலர், லியோ, இந்தியன் 2, சூர்யா 42, விடாமுயற்சி என வரிசையாக பல பெரிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன.