சினிமா செய்திகள்
நாளை வெளியாகிறது காப்பான் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. கடைசி வரையில் அந்த படம் சரியாக ஓடியதா? இல்லையா? என்பதே தெரியாத அளவுக்கு படத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் சேர்ந்தே இருந்தது.
இந்நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில், அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா இணைந்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான சிரிக்கி பாடல் நாளை ஜூலை 5ம் தேதி வெளியாகிறது.
சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ராட்சசி திரைப்படமும் நாளை வெளியாகவுள்ள நிலையில், சூர்யா, ஜோதிகா ரசிகர்களுக்கு நாளை டபுள் ட்ரீட் என்றே சொல்லலாம்.
ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் ஞானகரவேல் எழுதியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பாடல்களை வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். விரைவில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
















