சினிமா செய்திகள்
என்னது இப்படி ஆயிட்டாரே விஜய்சேதுபதி?

காக்கா முட்டை படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் கடைசி விவசாயி படத்தில் இடம்பெற்றுள்ள
விஜய்சேதுபதியின் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

விவசாயம் அழிந்து வரும் நிலையில், விவசாயம் செய்ய முடியாமல் வேதனையில் வாடி மனநலம் ஆன ஒருவரை பற்றிய கதையாக கடைசி விவசாயி உருவாகி வருகிறது. இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக விஜய்சேதுபதி நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இது விஜய்சேதுபதிதானா? என கேட்கும் அளவிற்கு புகைப்படங்கள் உள்ளன. விஜய்சேதுபதி, பாவமான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்கள், மறைமுகமாக பல வழிகளை மனங்களுக்குள் கடத்திச் சென்று கணமாக்குவதை உணரமுடிகிறது.
மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் யோகிபாபு யானையுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















