சினிமா செய்திகள்
களவாணி 2 படத்தின் ‘ஒட்டாரம் பண்ணாத’ வீடியோ பாடல் ரிலீஸ்!
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது களவாணி 2. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒட்டாரம் பண்ணாத’ வீடியோ பாடல் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணி அமுதவன் எழுதி இசையமைத்துள்ள இந்த பாடலை அவரும் நம்தா பாபுவும் இணைந்து பாடியுள்ளனர்.
விமல், ஓவியா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம் மாபெரும் வெற்றியை இருவருக்கும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிக்காக இந்த கூட்டணி இணைந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியானவுடன், படம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

















