சினிமா செய்திகள்
எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் & 2வது லுக் போஸ்ட்டர்!

தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தளபதி 63 படத்திற்கு பிகில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

விஜய் ரசிகர்கள் பெரிதும் ஆவலாக காத்திருந்த ஆளப்போறான் தமிழன் டைட்டில் அல்லது சிஎம் டைட்டில் இல்லாததால் ரசிகர்கள் சற்றே வருத்தத்தில் இருக்கின்றனர்.
இருந்தாலும், தெறி, மெர்சல் வரிசையில் இந்த படத்தையும் அட்லி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை கொண்டாடி வருகின்றனர்.
இரவு 12 மணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

பிகில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் 2வது லுக் போஸ்ட்டர் என இரண்டிலும் நயன்தாரா இடம்பெறவில்லை. மேலும் 3 கெட்டப்களில் விஜய் தோன்றுகிறார். ஒன்று அப்பா, இன்னொன்று கால் பந்து விளையாட்டு வீரர், கோட் ஷூட் போட்டு வருவது கோச் வேடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.






