சினிமா செய்திகள்
விஜய் வீட்டில் 30 மணி நேரம் கடந்து நடைபெற்று வரும் வருமான வரி சோதனை… கிடைத்தது என்ன?

நடிகர் விஜய் வீட்டில் நேற்று முதல் 30 மணி நேரத்தை கடந்தும் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி சோதனையின் போது விசாரணைக்காக, திருநெல்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யும் அழைத்து வரப்பட்டார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார், அதில் அசையா சொத்து ஏதேனும் வாங்கினாரா எனறு விசாரணை நடைபெற்று வருகிறது.
பிகில் திரைப்படம் 300 கோடிகள் வசூல் செய்துள்ளது, விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று ஊடகங்களில் பரவி வரும் தகவலின் பேரில் இந்த வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக நேற்று காலை முதல் ஏஜிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
அதன் பின்பு விஜய் அழைத்து வரப்பட்டு விசாரணை வலையத்திற்குள் உள்ளார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட விஜய் வீட்டில் கிடைக்கவில்லை. 30 மணி நேரம் கடந்து நடைபெற்று வரும் சோதனையில் மாலை முதல் மேலும் 3 அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
















