Connect with us

தமிழ்நாடு

விஜய் படத்தை போட்டு காட்டி 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை: சென்னையில் ருசிகர சம்பவம்!

Published

on

10 வயது சிறுவனுக்கு விஜய் படத்தை போட்டு காட்டி வலிக்காமல் சிகிச்சை செய்த டாக்டர்கள் குறித்த ருசிகர சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது

சென்னை அண்ணா சாலையில் நேற்று 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் உட்கார்ந்திருந்த சசிவர்ஷன் தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை உடனடியாக சிகிச்சை செய்ய முடிவெடுத்த டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கான ஊசியை செலுத்தி முயன்றனர்

ஆனால் ஊசி என்றால் தனக்கு பயம் என்றும் ஊசி வேண்டாம் என்றும் அழுதவாறு அந்த சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். அப்போது அங்கு வந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தபோது, சசிவர்ஷன் ஒரு தீவிரமான விஜய் ரசிகன் என்பதை தெரிந்து கொண்டார்

இதனையடுத்து அவர் தனது மொபைல் மொபைல் போனில் இருந்த விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்தார். அந்த சிறுவன் உற்சாக மிகுதியில் பிகில் படத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்கும் ஊசியை டாக்டர்கள் செலுத்தினர். அதன்பிறகு காயமேற்பட்ட பகுதியில் தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். அந்த சிறுவனும் விஜய் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைக்கு ஒத்துழைத்தார்.

தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகரான சசிவர்ஷன் பிகில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Trọng sinh Đô thị chí tôn. Dessutom spelar elpriset en viktig roll i den gröna omställningen och kan fungera som en drivkraft för att öka produktionen av förnybar energi. Đại la thiên đã đăng ký cho vương thuật, cho nên anh không cần phải đăng ký nữa, nhân viên trực tiếp đưa bảng ra giá cho anh, giá khởi điểm là 6 con số,.