Connect with us

ஆரோக்கியம்

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆறு அற்புத நன்மைகள் – தினமும் உட்கொண்டு ஆரோக்கியமாக இருங்கள்!

Published

on

தினமும் பப்பாளி சாப்பிடுங்கள் – உங்கள் உடலுக்கு கிடைக்கும் ஆறு அற்புத நன்மைகள்!

உடல்நலத்தைக் காக்கவும், நோய்களைத் தடுக்கவும் நமக்கு இயற்கையிலேயே பல மருத்துவ உணவுகள் கிடைக்கின்றன. அந்த வகையில், மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியது பப்பாளி பழம். குறைந்த விலையில் சுலபமாகவுமும் கிடைக்கும் இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. செரிமானம் மேம்படும்:
பப்பாளியில் நார்ச்சத்து மற்றும் பாப்பைன் எனும் சிறப்புச் சத்து இருப்பதால், இது செரிமானத்தை எளிதாக்கும். மலச்சிக்கலைக் குறைத்து, நெஞ்செரிச்சலையும் தடுக்கிறது.

2. பார்வை தெளிவாகும்:
பப்பாளியில் உள்ள லைகோபைன், லூடின், ஜீயாக்சாண்டின் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண் புரை ஏற்படுவதைத் தடுக்கும்.

3. இரத்த சர்க்கரை கட்டுப்படும்:
குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட பப்பாளி, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு பழமாகும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் லைகோபைன் இரத்தத்தில் சர்க்கரையை குறைக்க உதவுகின்றன.

4. புற்றுநோய் எதிர்ப்பு சக்தி:
பப்பாளியில் உள்ள லைகோபைன் புற்றுநோய்க்கு எதிராக போராடும். குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

5. உடல் வீக்கம் குறையும்:
ஆண்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பப்பாளி, உடலுக்குள் ஏற்படும் வீக்கங்களைத் தணிக்கிறது. இதனால் ஆர்த்ரிடிஸ், அல்சைமர், இதய நோய் போன்ற வீக்கம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

6. இதய ஆரோக்கியம் மேம்படும்:
பப்பாளியில் உள்ள சத்துக்கள், இதயத்திற்கு நல்லதாய் செயல்பட்டு, பக்கவாதம் மற்றும் இரத்தக்கழிவுகளின் அபாயத்தைத் தடுக்கின்றன.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..