ஆரோக்கியம்
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்: பாரம்பரிய கும்மாயம் மற்றும் காப்பரிசி செய்முறை!

ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு உணவுகளால் வீட்டை மகிழ்விக்க தயாராகுங்கள்!
இந்த பண்டிகையை சிறப்பிக்க, தமிழர்களின் பாரம்பரிய இனிப்புகள் எனும் கும்மாயம் மற்றும் காப்பரிசி இரண்டு முக்கியமான உணவுகளாக உள்ளன.
🍯 கும்மாயம் (Kummayam):
நகர்ப்புற விருந்துகளில் மிகவும் பிரபலம் ஆனது கும்மாயம். இது இனிப்பாகவும், மருத்துவ குணமுள்ள உணவாகவும் விளங்குகிறது. உளுந்து, கருப்பட்டி, நெய் ஆகியவற்றின் கலவையில் தயாராகும் இந்த உணவு இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்தது. பூப்படைதல் அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு இது அருமையான உணவாகும்.
தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
பச்சரிசி – 1/4 கப்
(இவை மூன்றையும் தனித்தனியாக வறுத்து, நன்கு ஆறியதும் நைசாக அரைக்கவும்)
செய்ய தேவையானவை:
கும்மாய மாவு – 1 கப்
கருப்பட்டி – 1/2 கப்
வெல்லம் – 1/2 கப்
தண்ணீர் – 4 கப்
நெய் – 1/4 கப்
செய்முறை:
மாவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும். வெல்லம், கருப்பட்டி சேர்த்து பாகு செய்து வடிகட்டி, மாவுடன் சேர்த்து சீராகக் கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும். இது சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பாக இருக்கும்.
🍚 காப்பரிசி (Kaaparisi):
ஆடிப்பெருக்கன்று செய்யப்படும் இன்னொரு பாரம்பரிய இனிப்பு காப்பரிசி. இது பச்சரிசி, கருப்பெள், பொட்டுக்கடலை உள்ளிட்டவற்றின் கலவையில் தயாராகிறது. இறைவனுக்கு படைத்து பிரசாதமாக வழங்கப்படும்.
தேவையானவை:
பச்சரிசி – 1/2 கப்
வெல்லம் – 1/2 கப்
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் – 2 டீஸ்பூன்
ஏலத்தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் கீறியது – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அரிசியை வறுக்கவும். எளையும் தேங்காயையும் வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். வெல்லம் கரைத்து பாகு செய்து, கலவையை அதில் சேர்த்து கிளறவும். உருட்டும் பதத்தில் இறக்கி, ஆடிப்பெருக்கு நாள் பிரசாதமாக சமர்ப்பிக்கலாம்.
