Connect with us

இந்தியா

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

Published

on

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர் கால செப்பேடுகள், ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும், Leiden Copper Plates எனவும் அழைக்கப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன.

இந்தச் செப்பேடுகள் இரண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 21 ஏடுகளைக் கொண்ட முதல் தொகுதி இராஜேந்திரச் சோழனால் வழங்கப்பட்டது. 3 ஏடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி இராஜேந்திரச் சோழனின் பேரனான குலோத்துங்கச் சோழனால் (1070-1120) வழங்கப்பட்டது.

இராஜேந்திரச் சோழன் வழங்கிய 21 செப்பேடுகளும் ஒரு மிகப் பெரிய வளையத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வளையம் இராஜேந்திரச் சோழனின் முத்திரையால் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, குலோத்துங்கனால் வழங்கப்பட்ட சிறிய செப்பேட்டுத் தொகுதியும் ஒரு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இராஜேந்திரச் சோழன் வழங்கிய செப்பேடுகளில் ஐந்து செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன.

சமஸ்கிருதத்தில் உள்ள பகுதி, சோழ மன்னர்களின் பரம்பரையைச் சொல்கிறது. தமிழில் உள்ள பகுதி இராஜேந்திரச் சோழனின் தந்தையான இராஜராஜ சோழனின் சில சாதனைகளைச் சொல்கிறது. பிறகு, ராஜராஜ சோழனின் 21ஆவது ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ விஜயநாட்டு மன்னனான மாற விஜயதுங்க வர்மன், தன் தந்தையின் பெயரால் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி பன்ம விகாரத்திற்கு ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள 26 கிராமங்களைத் தானமாகக் கொடுத்திருந்தான். அந்த தானத்தை இந்தச் செப்பேடுகள் மூலம் இராஜேந்திரச் சோழன் தாமிரசாசனம் செய்தான்.

முதலாம் குலோத்துங்கச் சோழன் வழங்கிய செப்பேடு, அந்த பௌத்த விகாரைக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன் காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் விரிவாக்கிய தானத்தை அளிக்கவும் எழுதப்பட்டிருக்கின்றன.

வரலாற்று ஆசிரியர்கள் இந்தச் செப்பேடுகளை வெறும் நிர்வாக ஆவணங்களாகக் கருதவில்லை. மத்தியகால தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகள் நிறைந்த உலகின் முக்கிய தடயங்களாக இவை திகழ்ந்தன என்று விவரிக்கின்றனர்

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த விகாரையின் இடிபாடுகள் நாகப்பட்டினத்தில் இருந்தன. 1867இல் விகாரை முழுவதுமாக இடித்துத் தள்ளப்பட்டது.

டச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூலம் இந்தியாவுக்கு வந்த நெதர்லாந்து நாட்டினர் சோழ மண்டலக் கடற்கரையில் பழவேற்காடு, சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 200 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தினர். டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி, 1690 இல் தனது கோரமண்டல் தலைமையகத்தை பழவேற்காடிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றியது. அப்போது இந்தப் பட்டயங்கள் ஐரோப்பியரின் கைகளுக்குச் சென்றன.

18 ஆம் நூற்றாண்டில், டச்சு காலனித்துவ ஆட்சியின் போது, கோரமண்டல் கடற்கரைப் பகுதியிலிருந்து ஆணைமங்கலம் செப்புப் பட்டயங்கள் நெதர்லாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

நாகப்பட்டினம் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில். இருந்த காலகட்டத்தில் இந்த இரண்டு செப்பேட்டுத் தொகுதிகளும் ஃப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டன.

இவரது வழிவந்தவர்களின் வசம் இந்த செப்பேட்டுத் தொகுதிகள் இருந்த நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹமேக்கர் குடும்பத்தினருடன் திருமணம் செய்துகொள்ள, செப்பேடுகள் ஹமேக்கர் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தன. முடிவாக, 1862இல் பேராசிரியர் எச்.ஏ. ஹாமேக்கர் (1789 – 1835) குடும்பத்தினரால், லெய்டன் அருங்காட்சியகத்திற்கு இந்தச் செப்பேடுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் ஹென்ட்ரிக் ஆரண்ட் ஹாமேக்கரின் சொத்துக்கள் வழியாக இவை லெய்டன் பல்கலைக்கழக சேகரிப்பில் சேர்க்கப்பட்டு அங்கேயே பாதுகாக்கப்பட்டன.

பல ஆண்டுகளாக, ஆனைமங்கலம் செப்பேடுகளை ஒப்படைக்கக் கோரி நெதர்லாந்து நாட்டை இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ பல ஆண்டு கால தூதரக முயற்சிகளுக்கு பிறகு நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்து பொது மக்களுக்கு காட்சிப் படுத்த ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் 20.05.2026

வணிகம்5 மணி நேரங்கள் ago

அலுவலக வருகையுடன் சம்பளத்தை இணைத்த TCS; புதிய ஊதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்

உலகம்5 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளாக ஜப்பானில் உணவகம் நடத்தி வந்த இந்தியர் வெளியேற வேண்டிய நிலை

வணிகம்5 மணி நேரங்கள் ago

இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்பு திட்டத்திற்காக CATL நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 2027 வரை தாமதமா?

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2026, புதன்கிழமை

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன் 2026 – 2027: 3-ம் இடத்தில் உச்ச குரு.. தைரியம், பணவரவு, திருமண யோகம் கைகூடும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.05.2026

இந்தியா5 நாட்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

சினிமா5 நாட்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

வணிகம்5 நாட்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்6 நாட்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

வணிகம்5 நாட்கள் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா4 நாட்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா4 நாட்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

Translate »
Primarne djelatnosti poduzeća bar ing su energetsko certificiranje te usluge građevinskog vještačenja. aaa mush love faq. olympia biosciences site map.