இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.05.2026

- முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக அவரது ஜோதிடர் ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவு வாபஸ். கடும் எதிர்ப்ப எழுந்த்தை அடுத்து இந்த நடவடிக்கை. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் ஆர்.ரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
- பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது. என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா எச்சரிக்கை. மே 15க்குள் ரூ.5 வரை விலை உயர்வு இருக்கம். வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரை உயரும்.
- தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் ஐபிஎஸ் ஐ நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
- தமிழ்நாடு நிதித்துறை புதிய செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்காசியைச் சேர்ந்தவர்.
- டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் இனி பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இயங்கும் வகையில் மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு.
- நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதால் அதனை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (NTA) கலைக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது,
- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் அவர்களின் வழக்கறிஞர் பதிவை நிறுத்திவைக்க கோரி காங்கிரஸ் எம்பி சுதா தாக்கல் செய்த மனுவை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.













