சினிமா செய்திகள்
அப்பாடா! ஒரு வழியா ஆர்யாவுக்கு பொண்ணு கிடச்சுடுச்சு அடுத்த மாசம் கல்யாணம்!

அறிந்தும் அறியாமலும் படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்யா, அந்த படத்தின் ஹீரோ நவ்தீப்பை விட தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா என்ற பாடல் மற்றும் அவரின் தனித்துவமான நடிப்பால் வெகுவாக பாராட்டப் பெற்றார்.

பின்னர், பல படங்களில் முன்னணி ஹீரோவாகவும், சில படங்களில் ஹீரோவின் நண்பன் மற்றும் மல்டி ஹீரோ புராஜெக்ட்களிலும் நடித்து வந்தார். சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான எந்த படமும் சிறப்பாக ஓடவில்லை.
இந்நிலையில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக, தனக்கு பெண் தேடுவதாக ட்விட்டரில் அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டு, ஷோவையும் ஓரளவு சர்ச்சைகளுடன் சாமர்த்தியமாக ஓட்டிவிட்டு, இறுதியில் எந்த பெண்களையும் தேர்வு செய்யாமல் எஸ்கேப் ஆனார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வனமகன் படத்தில் அறிமுகமான நடிகை சாயிஷாவுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் பரவின.
ஆனால், அதனை இரு தரப்பும் உறுதி செய்யவில்லை. மறுக்கவும் இல்லை. இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, காதலர் தினமான இன்று நடிகை சாயிஷா மற்றும் ஆர்யா, தனித்தனியாக தங்கள் காதலையும், அடுத்த மாதமான மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னர், திரை பிரபலங்களும் நட்சத்திரங்களும் இந்த காதல் ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.
கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யாவுடன் நடிகை சாயிஷா ஜோடி சேர்ந்து இறுதியாக நடித்திருந்தார். அந்த படம் ஆர்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், எதிர்கால மனைவியை தந்து விட்டது.




















