சினிமா
எந்த படமும் ஓடல; பையா 2வை எடுக்க போனி கபூர் மகளை தேடும் லிங்குசாமி!

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி சமீப காலமாக இயக்கும் படங்கள் எல்லாமே எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிப் படமாக மாறவில்லை. இந்நிலையில், பையா 2 படத்தை இயக்கும் முயற்சியில் லிங்குசாமி இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹிட் படங்களை கொடுத்து வந்த போதே அஜித்தின் ஜீ படம் இயக்குநர் லிங்குசாமிக்கு தோல்வி படமாக மாறியது. அதன் பின்னர் விக்ரமை வைத்து லிங்குசாமி இயக்கிய பீமா படத்திலும் பாடல்கள் ஹிட் அடித்த அளவுக்கு படம் ஓடவில்லை. கடைசியாக தனது ஒட்டுமொத்த வித்தையையும் இறக்குகிறேன் என சூர்யாவை வைத்து லிங்குசாமி செய்த அஞ்சான் சம்பவத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வறீயா என ஆர்ஜே பாலாஜி கலாய்த்து தள்ளி இருப்பார்.

#image_title
நீண்ட நாட்களுக்கு பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் பைலிங்குவல் படமாக லிங்குசாமி இயக்கத்தில் உருவான தி வாரியர் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்கிற ஆழ்ந்த யோசனையில் இருந்த லிங்குசாமிக்கு சண்டக்கோழி 2 போல நாம ஏன் பையா 2 படத்தை எடுக்கக் கூடாது என்கிற ஐடியா தோன்றியுள்ளது.
ஏற்கனவே ஆர்யாவை வைத்து வேட்டை படத்தை எடுத்திருந்த லிங்குசாமி மீண்டும் ஆர்யாவையே இந்த படத்திற்கும் ஹீரோவாக போட்டு விடலாம் என பேச்சுவார்த்தையையே முடித்து விட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
ஆர்யாவுக்கு பையா 2 படத்தில் ஜோடியாக நடிக்க துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூரை நடிக்க வைக்க இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.
கார்த்தி மற்றும் தமன்னாவே இன்னமும் டாப் நடிகர்களாக உள்ள நிலையில், பையா 2வில் இருவருமே ஏன் இல்லை என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.