சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ்!

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு க்ளீன் யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு.
தொடந்து சிவா இயக்கத்தில் படம் நடித்துக்கொண்டிருக்கிறார், அஜித். அவர் நடித்து பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.
விவேக், தம்பி ராமய்யா, யோகி பாபி, ரோபோ ஷங்கர் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்திய ஜோதி பிளிம்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு தனிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது என செய்திகள் வெளியாகிறது. அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும் என்பது உறுதி.
















