சினிமா செய்திகள்
கிரைம் த்ரில்லர் படத்தை இயக்க மிஷ்கினுக்கு ஐகோர்ட் தடை!

கிரைம் த்ரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குநர் மிஷ்கின், இனிமேல் அந்த ஜானர் படங்களை இயக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் அதிரடி தடை விதித்தது.
ரகுநந்தன் எனும் பைனான்சியர், கடந்த 2015ல் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக கூறி மிஷ்கின் ஒப்பந்தம் போட்டார். ஆனால், இதுவரை அந்த படத்தை இயக்கவே இல்லை என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், இயக்குநர் மிஷ்கின் கிரைம் த்ரில்லர் படங்களை இயக்க தடை விதித்து உத்தரவிட்டது.
உதய்நிதி ஸ்டாலினை வைத்து கிரைம் த்ரில்லர் படமான சைக்கோ படத்தை மிஷ்கின் தற்போது இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.












