சினிமா
விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு விரைவில் நிறைவு

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘தங்கலான்’. கே ஜி எஃப் களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. தற்பொழுது, கர்நாடகாவில் உள்ள கே ஜி எஃப் பகுதியில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
தற்பொழுது கேஜிஎஃப் களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் மூணு வாரங்களுக்குள் அதாவது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடைய இருக்கிறது. இதன் பின்பு, அடுத்து ஒரு 15 நாட்களுக்கான ஷெட்யூல் இருக்கிறது. இந்த 15 நாட்களில் 10 நாட்கள் சென்னையிலும் 5 நாட்கள் மதுரையிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கடுத்து மொத்தமாகவே ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தன்னுடைய தோற்றம் உடலமைப்பு என மொத்தமாக மாற்றியுள்ளார் நடிகர் விக்ரம். மேலும், இந்த படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளில் தீவிரமாக மாளவிகா மோகனன் ஈடுபட்டு வருவதையும் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.