சினிமா
வேலையில்லைன்னா இதத்தான் பண்ணுவேன்.. வெளிப்படையா சொன்ன தங்கலான் தங்கம்!

நடிகை மாளவிகா மோகனன் திடீரென ஒல்லியாகி விட்டாரே என ரசிகர்கள் வருத்தப்பட்டு விசாரித்து வந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் என்ன என்பதை ரசிகர்களுக்கு விளக்கும் வகையில் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் சியான் விக்ரமே ஓடாக தேய்ந்து நடித்து வரும் நிலையில், சிலம்பம் எல்லாம் கற்றுக் கொண்டு வீராங்கனையாக நடித்து வரும் மாளவிகா மோகனன் ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் இருக்க வேண்டும் என பா. ரஞ்சித் போட்ட கண்டிஷன் தான் காரணம் என தெரிகிறது.

#image_title
ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஜிம்மில் தான் இருப்பேன் என மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் மாஸ் கேப்ஷன் போட்டு டைட் ஜிம் உடையில் கிளாமர் குயினாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார் பேட்ட பட நடிகை.
சிரித்துக் கொண்டே புல் அப்ஸ் எடுப்பதும், டம்பிள்ஸ் உடன் டெரராக போஸ் கொடுத்தும் லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் அள்ளி வருகிறார் மாளவிகா மோகனன்.

#image_title
மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனின் மகளான மாளவிகா மோகனன் துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

#image_title
பிகினி பேபியாக இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டு வந்த மாளவிகா மோகனன் அடிக்கடி நீச்சல் குளத்தில் 2பீஸில் நீந்தியபடியும் போட்டோக்களை பதிவிட்டு பசங்கள பாடாய்ப்படுத்தி வருகிறார்.