சினிமா செய்திகள்
தளபதி 65 படம் பற்றி இந்த அப்டேட் உங்களுக்குத் தெரியுமா?

தளபதி 65 படம் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய்யின் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெலியாகியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது போல, தளபதி 65-ல் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருண் விஜய் ஏற்கனவே தல நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். இப்போது தளபதி படத்திலும் அருண் விஜய் வில்லனாக நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தளபதி 65 படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலில் தளபதி 65-ல் விஜய்க்கு ராஷ்மிகா மந்தானா, நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
தளபதி படத்துக்கு இயக்குநர் நெல்சனின் நண்பரான அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா, தயாரிப்பில் உள்ள டாகடர் திரைப்படத்துக்கும் அனிருத் தான் இசை அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















