சினிமா செய்திகள்
கானா நாயகனாக கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ட்ரெய்லர்..!
Published
2 years agoon
By
Barath
கானா நாயகனாக நடிகர் சந்தானம் கலக்கும் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
நடிகர் சந்தானத்துக்கு A1 என்ற வெற்றிப் படத்தை அளித்த இயக்குநர் ஜான்சன் தான் தற்போது பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். மிகவும் மூத்த ஒளிப்பதிவாளர் ஆன ஆர்தர் விலசன் பாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஆகப் பணியாற்றி உள்ளார். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
Music filled fun trailer of @iamsanthanam ‘s #ParrisJeyaraj OUT NOW ????https://t.co/aX9ZRCVl5D#ParrisJeyarajTrailer#JohnsonK @Music_Santhosh #LarkStudios @Kumarkarupannan @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @PrakashMabbu pic.twitter.com/jNQ8XXmdTV
— Think Music (@thinkmusicindia) January 18, 2021
கானா நாயகனாகவே நடிகர் சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் ஆக நடித்துள்ளதால் முழுக்க முழுக்க கானா இசையில் புகுந்து விளையாடி உள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தில் நாயகிகள் ஆக அனைகா சோதி மற்றும் சஸ்திகா ராஜேந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் மொட்டை ராஜேந்திரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இன்னும் சில வாரத்தில் திரை அரங்கங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You may like
-
சந்தானத்தை எல்லோரும் கூகுள்ன்னு கூப்பிடுவாங்களாம்: ஏன் தெரியுமா?
-
சந்தானம் நடித்த ‘சபாபதி’: அட்டகாசமான டிரைலர்
-
சந்தானம் படத்திற்காக தமிழில் டுவிட் செய்த ஹர்பஜன்சிங்!
-
டைம் மெஷினில் பயணிக்கும் சந்தானம் ‘டிக்கிலோனா’ ட்ரெயலர்!
-
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சந்தானம் படம்: ரிலீஸ் தேதி இதுதான்!
-
சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ சென்சார் சான்றிதழ் தகவல்!