சினிமா செய்திகள்
உன் புருஷன் என்னை கொச்சைப்படுத்திவிட்டார்: சுஜாவை வெளுத்து வாங்கிய வனிதா!

என்னையும் தர்ஷனையும் தவறாக ட்வீட் போட்டு உன் புருஷன் என்னை கொச்சை படுத்தி விட்டார் என சுஜாவை வனிதா வெளுத்து வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், அபிராமி, நிரூப் ஆகிய 14 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் அனைவருமே இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் இருப்பதால் சண்டை சச்சரவுக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது என்பதும், முதல் நாளை சண்டை வந்து விட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் சொல்லி வைத்தார் போல் சண்டை சச்சரவு வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுஜாவின் கணவர் தனது டூவிட்டரில் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக சுஜாவை வனிதா வெளுத்து வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தர்ஷன் மீது ஆசை கொண்ட வனிதா, தர்ஷன் மற்றும் ஷெரின் பிரிய காரணமாக இருந்தார் என சுஜாவின் கணவர் டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த டுவிட்டை குறிப்பிட்ட வனிதா, நானும் தர்ஷனும், அக்கா தம்பி மாதிரி பழகினோம், ஆனால் அந்த உறவை உன் புருஷன் கொச்சைப் படுத்தி விட்டார் அதனால் தான் உன் மீது எனக்கு கோபம் என்று பேசியதால், சுஜா அதற்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் இருந்த காட்சிகள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சுஜாவிடம் வனிதா தற்போது சகஜமாக பழகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















