சினிமா செய்திகள்
இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படத்தின் டைட்டில் மாற்றம்: புதிய டைட்டில் இதோ!

பிரபல இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான திரைப்படம் ’சிவ சிவா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது என்பதும் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும் டைட்டில் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதையும் இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஜெய் நடிப்பில் ’சிவ சிவா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். விரைவில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த திரைப்படத்தை பார்த்த என் நண்பர்கள் வெகுவாக என்னையும் என் படக்குழுவினர்களின் பாராட்டினார்கள்.
அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்கள். இத்திரைப்படம் கிராமம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் ’சிவ சிவா’ திரைப்படத்திற்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் இன்னும் இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார்கள்.
அவர்கள் கூறிய ஆலோசனையில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளர் அவர்களின் சம்மதத்துடன் என் உதவியாளர்களுடன் ஆலோசித்து ’சிவ சிவா’ என்ற தலைப்பை மாற்றி ’வீரபாண்டியபுரம்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
— Suseenthiran.Na (@Dir_Susi) February 3, 2022


















