சினிமா
2 நாள் முன்பே ரிலீஸ் ஆகும் வலிமை – கொத்தாக தூக்கிய போனிகபூர்

தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
இப்படம் ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகையின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 நாட்கள் முன்பே அதாவது ஜனவரி 12ம் தேதியே இப்படத்தை வெளியிடலாம் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு காரணமும் இருக்கிறது.

ஜனவரி 12ம் தேதியே ரிலீஸ் செய்தால் அஜித் ரசிகர்கள் மட்டும் 2 நாட்கள் இப்படத்தை பார்ப்பார்கள். ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் மற்ற ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். எனவே, மொத்தம் 6 நாட்களில் வசூலை அள்ளிவிடலாம் என கணக்கு போட்டுள்ளாராம்.
எப்படி ஆனாலும் எதிர்பார்த்த தேதியிலிருந்து 2 நாட்கள் முன்பே இப்படம் வெளியாவது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















