உலகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்புக்கு கோவிட்-19 தொற்று உறுதி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரக் கலத்தில் சுழன்று கொண்டு இருந்த டொனால்ட் டிரம்புக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அவரது ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரோனா தொற்று குறித்து டிவிட்டரில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப், உடனடியாக நாங்கள் எங்களது தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


















