தமிழ்நாடு
சசிகலாவை அடுத்து இளவரசி இன்று விடுதலை: சுதாகரன் விடுதலை தாமதம் ஏன்?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்தது. அவர் தற்போது பெங்களூரில் இருந்து வரும் நிலையில் விரைவில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சசிகலாவுடன் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய இருவரும் தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இளவரசி இன்று காலை விடுதலை ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இளவரசியின் தண்டனை காலம் முடிந்து விட்டதாகவும் இதனை அடுத்து இன்று காலை 11 மணிக்கு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அடுத்து இளவரசியை வரவேற்க அவரது குடும்பத்தினர் பெங்களூரில் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் சுதாகரனின் தண்டனை காலம் முடிந்து விட்டது என்றாலும் அவர் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை என்பதால் அவரது விடுதலை தள்ளிப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் தொகையை செலுத்தாவிட்டால் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் விரைவில் அபராத தொகையை செலுத்துவார் என்றும் இதனை அடுத்து அவர் கூடிய விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
இளவரசிக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 10 கோடி அபராத தொகையை அவரை ஏற்கனவே செலுத்தி விட்டார் என்பதால் அவர் இன்று விடுதலை ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


















